தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் 50வது திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்து வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டராகி அந்த சமயத்தில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

க்ளௌட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவான மங்காத்தா திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் வேற லெவல் ஹிட்டிக்க யுவனின் பின்னணி இசை படத்திற்கு மற்றொரு பலமாக அமைந்தது. இன்றும் பலரது ரிங்டோனாக மங்காத்தா தீம் மியூசிக் ஒலிப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு பாட்ஷா என்றால் அஜித் குமார் அவர்களுக்கு மங்காத்தா எனும் சொல்லும் அளவிற்கு மங்காத்தா படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் ஒரு திரைப்படத்தின் பார்ட்-2விற்க்காக அனேக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இன்றுவரை காத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் மங்காத்தா திரைப்படத்திற்கு தான்.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளிவந்த மங்காத்தா திரைப்படம் இன்றோடு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மங்காத்தா படத்தின் 11 ஆண்டுகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இதுவரை வெளிவராத மங்காத்தா திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அட்டகாசமான அந்த புகைப்படங்கள் இதோ…
 

Thanks for the trust na!! #11YearsOfCultMANKATHA more unseen pics from #mankatha tomorrow!! #ak #thala thank you for the love tweeps!! pic.twitter.com/kyeRIDhu5B

— venkat prabhu (@vp_offl) August 30, 2022