தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் மிகச் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்றும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸாக உள்ளது.

இதனிடையே இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 20க்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்களில் அசத்தியிருக்கும் சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் இன்று ஆகஸ்ட் 31ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கோப்ரா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 

மிரட்டலான பல கெட்டப்களில் அதிரடியாக நடித்திருக்கும் சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை கோப்ரா திரைப்படத்தின் முதல் காட்சியை இணைந்து சீயான் விக்ரம்,துருவ் விக்ரம் உட்பட படக்குழுவினர் ரசிகர்களோடு திரையரங்கில் கண்டு ரசித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…