தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இதில் மாஸ்டர்,விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்தினை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாஸ்டர் படத்தின் மிக பெரிய வெற்றியை அடுத்து இருவரும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக சமூகவலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

அடுத்த படம் விஜயுடன் தான் என்பதை உறுதிசெய்வது போல சில பல நிகழ்வுகளில் லோகேஷ் ஹிண்ட் கொடுத்துள்ளார்.தற்போது லோகேஷுடன் அவரது நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் பட இயக்குனர் தீரஜ் வைத்தி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.தளபதி 67 ஸ்கிரிப்ட் வேளைகளில் இணைந்துள்ளாரா என்ற ஆவலை இந்த புகைப்படம் தூண்டியுள்ளது.