தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான முதல் வெப்சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் வரிசையாக பார்டர், பாக்சர் & அக்னி சிறகுகள் ஆகிய ஆக்ஷன் ப்ளாக் திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் GNR.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த சினம் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வருகிற செப்டம்பர் 16-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அருண் விஜய் உடன் இணைந்து பல்லாக் லால்வானி கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி ஆகியோர் சினம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவில், A.ராஜாமுஹமது படத்தொகுப்பு செய்துள்ள சினம் திரைப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.

ஸ்டண்ட் சில்வாவின் மிரட்டலான ஸ்டண்ட் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் சினம் திரைப்படத்தை மூவிஸ் ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் R.விஜய்குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் சினம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான சினம் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ…