சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Censor Board Appreciates Suriyas Soorarai Pottru

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழுமம். 

Censor Board Appreciates Suriyas Soorarai Pottru

இப்படத்தை பார்த்த சென்சார் குழு, படக்குழுவினர் மற்றும் சூர்யாவின் நடிப்பை பாராட்டியுள்ளது. ஸ்ட்ராங்கான எமோஷன்ஸ் மற்றும் சாலிட்டான பெர்ஃபர்மன்ஸ் நிறைந்த படமாக உள்ளதாம். நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.