சாதி வெறியால், 17 வயது சிறுவன் அக்காவின் காதலனை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளா மாநிலம் முவட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

17yo kills sisters lover caste violence

பதிலுக்கு அந்த பெண்ணும், அந்த இளைஞரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த காதல் விவகாரம், அந்த இளம் பெண்ணின் 17 வயது தம்பிக்கு தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், அக்காவின் காதலன் குறித்து விசாரித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, அந்த 20 இளைஞர் அங்குள்ள கடை ஒன்றில் முகக்கவசம் வாங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த காதலியின் தம்பி, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளைஞரை கத்தியால் குத்தி உள்ளார்.

அப்போது, அதைத் தடுக்க முயன்ற அந்த காதலனின் நண்பருக்கும் கத்தி குத்து ஏற்பட்டு, அவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர்.

இது குறித்து, அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் வருவதற்குள் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

17yo kills sisters lover caste violence

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, “அக்காவை காதலித்தவன் வேறு ஒரு சமுகத்தைச் சேர்ந்தவன் என்பதால், கத்தியால் குத்தியதாக” கூறியுள்ளான். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே, சாதி வெறியால், 17 வயது சிறுவன் அக்காவின் காதலனை கத்தியால் குத்திய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.