கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய பாலியல் வழிகாட்டி நெறிமுறைகளை அமெரிக்காவின் ஒரேகான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கொரோனா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ், உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Coronavirus sex guidelines in America

ஒவ்வொரு தளர்வுகளுக்கும் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளையும் அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா காலத்தில் கணவன் - மனைவி இருவரும் வீட்டிலேயே இருப்பதால், அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதனால் முகக்கவசத்திற்கு இணையாக ஆணுறை உள்ளிட்ட பாலியல் சாதனங்களின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும், அதன் உற்பத்தி நிறுவனங்கள் கூறி வந்தன.

இந்நிலையில், கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய பாலியல் வழிகாட்டி நெறிமுறைகளை அமெரிக்காவின் ஒரேகான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை, 'OR Health Authority" தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

Coronavirus sex guidelines in America

- தனது துணையுடனான நேரடி உடலுறவை விட, சுய இன்பமே பாதுகாப்பானது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- குறிப்பாக, துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, ஓரல் செக்ஸ் வேண்டாம் என்றும், அதைக் கூடுமான வரை தவிர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- ஓரல் செக்ஸ் மூலம் பலவிதமான கிருமிகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று, இது பல புதிய நோய் தாக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கூடுமான வரை அனைத்துவிதமான முத்தகங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

Coronavirus sex guidelines in America

- முத்தத்தில் தொடங்கும் பாலியல் உறவு, எச்சில் வழியாக கொரோனாவின் அனைத்துவிதமான அறிகுறிகளையும் காட்டு சக்தி கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

- அதேபோல், ஒரே பாலின உறவுமுறைகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- துணையுடன் நேரடியாக உறவு வைத்துக்கொள்வதைக் காட்டிலும், செக்ஸ் டாய்ஸ் மூலம், அந்த இன்பத்தை அனுபவிப்பது சிறந்தது என்றும், ஒரேகான் ஆலோசனை வழங்கி உள்ளது.

- அப்படிப் பயன்படுத்தப்படும் செக்ஸ் டாய்ஸ், பொம்மைகளை, சோப்பு, கிருமி நாசினி மற்றும் தண்ணீரில் சுத்தமாக கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

- பாலியல் இன்பத்திற்கு முன்பும், அதன் பின்பும் கை மற்றும் உடல் பாகங்களைச் சோப்பால் நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் தம்பதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- எல்லாவற்றுக்கும் மேலாக பாலியல் தொழிலாளர்களைத் தயவு செய்து, யாரும் தேடிச் செல்ல வேண்டாம் என்றும் ஒரேகான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.