இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி 2 முறை கருக்கலைப்பு செய்த பின்னும், திருமணம் செய்யாமல் போலீஸ் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அசோகன் தெருவைச் சேர்ந்த 29 வயதான அண்ணாமலை, ஆயுதப்படைப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

Policeman cheats woman and gets her abortion twice

இதனிடையே, அண்ணாமலை அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மேகலா என்ற இளம் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

மேலும், அந்த பெண்ணை காதலிக்கும்போது திருமணம் செய்துகொள்வதாகப் பல முறை ஆசை வார்த்தைகள் கூறி, மேலாவிடம் பல முறை அத்துமீறி அண்ணாமலை உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மேகலா தொடர்ந்து 2 முறை கருவுற்ற நிலையில், அண்ணாமலையின் வற்புறுத்தலின்பெரில், அவர் 2 முறையும் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை கடந்த சில வாரங்களாக மேகலாவுடன் பேசாமல், அவரை தவிர்த்து வந்துள்ளார். அப்போது, அண்ணாமலை வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்து வருவதைத் தெரிந்துகொண்ட மேகலா, தனது குடும்பத்தினருடன் அண்ணாமலையின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார். 

Policeman cheats woman and gets her abortion twice

இதற்கு, அண்ணாமலையின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலை ஏற்கவும் மறுத்துவிட்டனர். மேலும், அண்ணாமலையும் மேகலா வேண்டாம் என்று கலற்றிவிட்டதாக தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மேகலா, “காதலித்து ஏமாற்றிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கும்படி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார்” அளித்தார்.

அப்போது,  “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது அவருக்குக் காவலர் பணி கிடைத்ததால், தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும்” மேகலா குற்றம்சாட்டினார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர், புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், மேகலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாகக் காவலர் மீது இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.