டிக்டாக்கில் இளைஞரை காதல் வலையில் வீழ்த்தி மோசடியாக 97 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளம் பெண்ணை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராமச்சந்திரன், மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

Tik Tok girl cheats boy lover steals rupees ninety seven thousand

இதனிடையே, திருப்பூரைச் சேர்ந்த சுசி என்கிற பெண், டிக்டாக்கில் அம்முக்குட்டி என்ற பெயரில், ராமச்சந்திரனுக்கு டிக்டாக் மூலம் அறிமுகமாகி உள்ளார்.

அப்போது, சுசி என்கிற அம்முக்குட்டி, டிக்டாக் மூலம் ராமசந்திரம் மீது அளவுக்கு அதிகமாக அன்பு காட்டி உள்ளார். இந்த அன்பில் ராமச்சந்திரன் நெக்குறிகிப் போனதாகத் தெரிகிறது. 

மேலும், இவர்களது அன்பு டிக்டாக்கை தாண்டி, முகநூல் வரை விரிந்தது. இதனால், இவருக்குள்ளும் அன்பும், நெருக்கமும் மனதளவில் அதிகரித்தது.

இந்த சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சுசி, தங்கள் குடும்பத்தில் பிரச்சனை என்றும், வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், மருத்துவ உதவிக்குப் பணம் தேவை என்றும் கூறி,  கொஞ்சம் கொஞ்சமாக 97 ஆயிரம் ரூபாய் மோசடியாக பறித்துள்ளார்.

Tik Tok girl cheats boy lover steals rupees ninety seven thousand

தொடர்ந்து பணம் பெற்றுக்கொண்ட சுசி, கடந்த சில நாட்களாக தன்னுடைய டிக்டாக் மற்றும் முகநூல் பக்கம் வரவேயில்லை. அப்போது, சற்று யோசித்தப்பார்த்த ராமச்சந்திரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், மதுரை காவல்துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அடுத்த 24 மணி நேரத்தில், திருப்பூர் அடுத்த ஆலங்காடு வீரபாண்டி அருகில் வசித்து வந்த இளம் பெண் சுசிசை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அத்துடன், சுசி பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், “ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், இதேபோன்று மேலும் சிலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சுசியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளம் பெண், டிக்டாக்கில் இளைஞரை காதல் வலையில் வீழ்த்தி அவரிடம் மோசடியாக 97 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.