ஆல் டைம் ஃபேவரட் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாகவும் நகைச்சுவை மையப்படுத்திய கலக்கலான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இந்த ஆண்டில்(2022) சந்தானம் நடிப்பில் வெளிவந்த குலுகுலு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் வித்தியாசமான காமெடி ஸ்பை த்ரில்லர் படமாக சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஸ்ரீ ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் ரீமேக்காக சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம் உடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

LABYRINTH FILMS நிறுவனம் தயாரித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திற்கு, தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவில், அஜய் படத்தொகுப்பு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலர் இதோ…