பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர். ஷிவானியின் தாயார் வருகையை தொடங்கி மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தனர். வழக்கம் போல பிக் பாஸ், ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் பிக் பாஸ் freeze டாஸ்கை கொடுத்து வந்தார். அப்போது ரம்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் அவரது சகோதரர் முதலில் வந்தார். அதன் பின் அவர் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தபோது அவரது அம்மாவும் ஸ்டோர் ரூம் வழியாக வீட்டுக்குள் வந்தார். 

என் பேட்டரி வந்திருக்கிறது என ரம்யா அவரை பார்த்து மகிழ்ச்சி ஆனார். ரம்யாவின் சகோதரர் பேசும்போது அவருக்கு ஒரு அறிவுரையை கூறினார். இந்த வாரம் ஒருவேளை நீ எலிமினேட் ஆனால் அதற்கு நீ துளி கூட காரணம் இல்லை என கூறினார். ரம்யாவின் அம்மா பேசும்போது யாரை பற்றி யாரிடமும் பேசாதே. அதை அந்த இடத்திலேயே அவர்கள் முன்னேயே பேசிவிடு என கூறினார். ரம்யா மற்ற போட்டியாளர்களை பற்றி பின்னாடி பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டு நெட்டிசன்களால் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று ரியோவின் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் ரியோ கண்ணீர்விட்டு கொண்டே ஓடிச்சென்று அவரை கட்டிபிடித்து அழுதார். நான் இங்கு வந்திருக்கவே கூடாது என சொல்லி மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். அவர் ரியோவை ஆறுதல் படுத்தினார். அதன் பின் மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அவர் சந்தித்து பேசினார். அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தபோது ரம்யாவை ரியோ அலேக்காக தூக்கியது அவரது நண்பர்கள் பலருக்கும் கடுப்பை ஏற்படுத்தியது என ஸ்ருதி கூறினார். இது நண்பர்கள் கடுப்பான மாதிரி தெரியலையே என ரியோ மனைவியை கலாய்த்தார்.

அதன் பின் டிவியில் ரியோவின் மகள் வீடியோ காட்டப்பட்டது. குடும்பத்தினரும் ரியோவுக்கு வாழ்த்து கூறினார். அதன் பின் பிளாக் ஷீப் டீம் ரியோவை பிரிந்து இருப்பதால் வருத்தத்துடன் இருப்பதாக கூறி அனைவரும் சிக்கன் சாப்பிடுவது போல காட்டி அவரை கிண்டல் செய்திருந்தனர். அடுத்து சோமின் சகோதரர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இவரும் அனைத்து போட்டியாளர்களிடமும் ஜாலியாகவே பேசிக்கொண்டிருந்தார்.

சோம் சேகர் மற்ற அனைவரையும் குமார் என கூறி பேசுவது போல அவரும் ஒவ்வொருவராக கூறி பேசினார். சோம் இன்னும் அதிகம் பேச வேண்டும், எந்த விஷயமாக இருந்தாலும் அவர் தனது கருத்தை இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என அவர் கூறினார். அதன் பின் சோம் குடும்பத்தினர் மற்றும் நாய் குட்டி இருக்கும் வீடியோவும் போட்டு காட்டப்பட்டது. சோம் அதை பார்த்து சற்று எமோஷ்னல் ஆனார்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், கேபியின் தாயார் வருகை காண்பிக்கப்பட்டுள்ளது. சமையல் செய்து கொண்டிருந்த கேபி, அம்மாவை பார்த்த மகிழ்ச்சியில் ஓடிச் சென்று கட்டி அணைத்தார். பிறகு அம்மாவிடம் புலம்பிய கேபி, இந்த வீட்டில் நான் எது செய்தாலும் என்னை பாராட்ட மாட்டார்கள். இங்கு அனைவரும் blind என வெளிப்படையாக பேசியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வார எவிக்ஷன் சற்று சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.