பிக்பாஸ் 4 : பாலாஜியை குறை கூறும் அனிதா ! சூடுபிடிக்கும் நாமினேஷன்
By Sakthi Priyan | Galatta | December 24, 2020 12:39 PM IST

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர்களுக்கு நடுவில் சண்டை அடிக்கடி நடக்கிறது. இன்று நடந்த பால் கேட்ச் டாஸ்க்கிலும் ஷிவானி பந்தை தட்டிவிட்டார் என மிகவும் ரூடாக பாலாஜி பேசினார். அதனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் வாக்குவாதம் வெடித்தது. You cant talk to me like this என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் ஷிவானி. அதன் பின் இதற்காக கண்ணீர் விட்டார் அவர்.
கிட்சன் டீம் கேப்டனாக இருக்கும் அனிதா துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பை ஊற வைத்துவிட்டு அதை அப்படியே இரண்டு நாட்கள் fridgeல் கூட வைக்காமல் வெளியில் வைத்திருந்தார் என்றும் அதன் பின் எடுத்து குப்பையில் கொட்டினார்கள் என்றும் ஆரி கேப்டன் பாலாஜியிடம் புகார் கூறினார்.
பால் கேட்ச் டாஸ்க்கின் இன்றைய நான்காவது பகுதியில் போட்டியாளர்களுக்கு தங்க நிற பந்துகள் அனுப்பப்பட்டன. அந்த பந்தை பிடிக்கும் போட்டியாளர்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் போர்டில் இருக்கும் எதாவது ஒரு சக்திகளில் எடுத்து அதில் இருக்கும் விஷயத்தை செய்யலாம். பாலாஜி ஒரு கார்டை எடுத்து தன்னுடைய மதிப்பெண்களை 100 அதிகரித்து கொண்டார்.
அதன் பின் ரம்யா எடுத்த கார்டில் யாராவது ஒருவரது மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்க வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது ரியோவின் மதிப்பெண்களை அவர் பூஜ்ஜியம் ஆக்கினார். அதன் பின் பாலாஜியின் மதிப்பெண்களை கேபி பூஜ்ஜியம் ஆக்கிவிட்டார். இதை கேபி மற்றும் ரியா இருவரும் கொண்டுகின்றனர். இதனால் கோபமான பாலாஜி கேபி அடுத்து zero நீ தான் என கூறி சவால் விட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதா சம்பத் நாமினேஷன் குறித்து பேசுகிறார். அப்போது பேசியவர் பாலாஜியை குறை கூறி பேசியுள்ளார். என்ன காரணம் என்று பாலாஜி கேட்டாலும் அதை விளக்காமல் அவரே பேசி வருகிறார். ஷிவானி தூங்குனத நீங்க சொல்லல பாலா என்று கேட்க, அருகில் இருந்த ஷிவானி அழுவது போன்று ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அடுத்த டாஸ்க்கில் கேபி மற்றும் அனிதாவை பழித்தீர்ப்பாரா பாலாஜி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள்.
#Day81 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/SO18oXtvy3
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020
Anitha makes Shivani cry | Shivani in tears | Latest Bigg Boss 4 Tamil Promo
24/12/2020 12:09 PM
Jayam Ravi's Bhoomi - direct OTT release CONFIRMED | Official Announcement here!
24/12/2020 11:09 AM