அடுத்தடுத்து தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயணட் மூவிஸ் நிறுவனம் வரிசையாக தரமான படைப்புகளை வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்குகிறது.

முன்னதாக அஜித்குமார் நடிப்பில் இந்த பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் முக்கிய திரைப்படம் டாடா. பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் டாடா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா படத்தில் அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எழில் அரசு.K ஒளிப்பதிவில், டாடா திரைப்படத்திற்கு கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் டாடா திரைப்படம் இந்த 2023 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாடா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் டாடா படத்தின் கலக்கலான டீசர் இதோ…