2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களில் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!

இந்தியன்2, தளபதி67, AK62 படங்களில் ரிலீஸ் குறித்த தகவல்,producer dhananjayan opens about thalapathy 67 ak62 indian 2 release plans | Galatta

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ரிலீஸான நிலையில், அடுத்தடுத்து இவர்களது நடிப்பில் தயாராகும் தளபதி 67 மற்றும் AK62 குறித்தும் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது.

முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் குமாருடன் இணைந்து அரவிந்த்சாமி, சந்தானம் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று ஜனவரி 20 ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெறுகிறது. பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் ப்ரித்விராஜ், கன்னட நடிகர் ரக்ஷித் செட்டி, த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் என தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்திய இந்தியன்2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் தளபதி67, இந்தியன்2 மற்றும் AK62 ஆகிய படங்களின் ரிலீஸ் திட்டங்கள் குறித்து பேசினார்.

முன்னதாக தற்போது வந்த வாரிசு துணிவு மட்டும் அல்லாமல் அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்களான AK62 & தளபதி67 படங்கள் இதே ஆண்டில் ரிலீஸாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது இந்த இரண்டு திரைப்படங்களும் தீபாவளி ரிலீஸாக வெளிவருமா எனக் கேட்டபோது, "அப்படி வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் அஜித் குமாரின் AK62 படத்தையும் தயாரிப்பதால் இரண்டு படத்தையும் ஒரே சமயத்தில் வெளியிட வாய்ப்பு இல்லை. எனவே தீபாவளிக்கு அஜித் மற்றும் விஜய்யின் AK62 & தளபதி67 படங்கள் வர வாய்ப்பு இல்லை. ஒருவேளை அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம்" என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

சினிமா

"தனுஷின் 50வது படம்!"- திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி! விவரம் உள்ளே

வெங்கட் பிரபுவின் பக்கா மாஸ் போலீஸ் படம்... சர்ப்ரைஸாக வந்த அசத்தலான கேரக்டர் GLIMPSE இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் பக்கா மாஸ் போலீஸ் படம்... சர்ப்ரைஸாக வந்த அசத்தலான கேரக்டர் GLIMPSE இதோ!

விஜய் சேதுபதி அதிரடியான முதல் வெப் சீரிஸ்... கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

விஜய் சேதுபதி அதிரடியான முதல் வெப் சீரிஸ்... கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE வீடியோ இதோ!