மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!

விஜய் சேதுபதியின் ஃபர்ஸி வெப்சீரிஸின் புதிய ப்ரோமோ,vijay sethupathi in farzi web series new action promo | Galatta

தனக்கென தனி பாணியில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்து மக்களின் மனதை கொள்ளையடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து வரிசையாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜமான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் கத்ரீனா கைஃபுடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தில் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கர், மௌன படமாக தயாராகும் காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, இரண்டு பாகங்களாக தயாராக இருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் ரிலீஸாகவுள்ளதாக தெரிகிறது. 

அதற்கு முன்பாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் படமான மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி ரிலீஸாகிறது. இந்த வரிசையில் தனது திரைப்பயணித்தில் முதல்முறையாக வெப் சீரிஸிலும் களமிறங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பாலிவுட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவர உள்ளது ஃபர்ஸி.

இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் உருவாகி இருக்கும் FARZI வெப் சீரிஸில் ஹிந்தி நடிகர் சாஹித் கபூர் உடன் இணைந்து விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கே கே மேனன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். FARZI வெப் சீரிஸ் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

போலி ரூபாய் நோட்டுகளை மையப்படுத்திய கதைக்களமாக தயாராகி இருக்கும் ஃபர்ஸி வெப்சீரிஸில் கள்ள ரூபாய் நோட்டுகளை தடுத்து நிறுத்தி மோசடி கும்பலை பிடிக்கும் அதிரடியான காவல்துறை அதிகாரியாக மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மைக்கேல் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய புரோமோ வீடியோ தற்போது வெளியானது. அதிரடியான அந்த பக்கா ஆக்ஷன் ப்ரோமோ இதோ…
 

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!
சினிமா

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!

சினிமா

"தனுஷின் 50வது படம்!"- திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி! விவரம் உள்ளே

வெங்கட் பிரபுவின் பக்கா மாஸ் போலீஸ் படம்... சர்ப்ரைஸாக வந்த அசத்தலான கேரக்டர் GLIMPSE இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் பக்கா மாஸ் போலீஸ் படம்... சர்ப்ரைஸாக வந்த அசத்தலான கேரக்டர் GLIMPSE இதோ!