விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் ஷிவானி நாராயணன்.

சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார் ஷிவானி.சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார் ஷிவானி.பிக்பாஸில் இருந்து வெளியேறிய சில படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார் ஷிவானி.

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஒரு ஜோடியாக நடித்து வருகிறார் ஷிவானி.தற்போது தான் நடிக்கும் புதிய படத்தில் இருந்து ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி.பொன்ராம் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.இது விஜய்சேதுபதி நடிக்கும் VJS 46 படமா இல்லை வேறு புதிய படமா என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எடிதிர்பார்க்கப்படுகிறது.