தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராகவும் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளராகவும் திகழும் தமன்.S, பீஸ்ட் படத்திற்கு அடுத்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தளபதி விஜய் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் SK20 இருக்கும் இசையமைக்க உள்ள தமன் இசையில் இந்த ஆண்டு (2022) அடுத்தடுத்து மாஸ் கமர்சியல் திரைப்படங்கள் வெளிவர உள்ளன. முன்னதாக மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடித்துவரும் காட்ஃபாதர் மற்றும் ஐயப்பன் கோஷியும் படத்தின் ரீமேக்காக பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடித்துள்ள பீம்லா நாயக் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தின் பின்னணி இசை என ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க உள்ளார் தமன். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தசான அறிகுறிகளோடு தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் தமன். இதுகுறித்து தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

அனைவருக்கும் வணக்கம்,
கோவிட் 19 நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது, உடல் நலம் தேறி வருகிறேன். இந்த மோசமான காலகட்டத்தில் எனக்காகப் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி… தொடர்ந்து என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும், குழந்தை போல் பார்த்துக் கொண்ட எனது குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
தயவு செய்து அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள், கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், முக கவசம் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள். 
என்றும் உங்கள் ஆதரவுக்கு நன்றியுடன், 
தமன்.S 

என தெரிவித்துள்ளார்.