தமிழ் திரை உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு & இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களின் மூலம்  நடிகையாக திரைப்பயணத்தைத் தொடங்கினார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார்.

இதனையடுத்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள கடமையை செய், பிக் பாஸ் ஆரவ்-ன் ராஜபீமா மற்றும் நடிகர் மகத்தின் இவன்தான் உத்தமன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச்சென்ற யாஷிகாவுக்கு பலத்த காயங்களோடு பல்வேறு எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு எலும்பு முறிவுகளுக்கான அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றது. 

இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்பட்ட பல்வேறு எலும்பு முறிவு காரணமாக நீண்ட நாட்கள் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருந்த யாஷிகா பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக விபத்திலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார். இந்நிலையில் விபத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து “மன உறுதியே மீண்டு வருவதற்கான என் சாவி” என தெரிவித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…