தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் அசோக்செல்வன் தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை மற்றும் ஹாஸ்டல் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாஷம்) திரைப்படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். முன்னதாக அறிமுக இயக்குனர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் அசோக்செல்வன் நடித்துள்ள வேழம் திரைப்படம் கடந்த ஜூன் 24ஆம் தேதி ரிலீசானது.

K 4 KREATIONS தயாரிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்துள்ள  வேழம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அசோக் செல்வன் உடன் இணைந்து ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள வேழம் படத்தில் ஷ்யாம் சுந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வேழம் திரைப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வேழம் திரைப்படத்திலிருந்து மாறும் உறவே வீடியோ பாடல் தற்போது வெளியானது. தீபிகா கார்த்திக் குமார் எழுதி பாடியுள்ள ரம்மியமான மாறும் உறவே வீடியோ பாடல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பாடல் வீடியோ இதோ…