தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சிபி சத்யராஜ் அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் ரேஞ்சர் திரைப்படத்தில் சிபி சத்யராஜ் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக சிபி சத்யராஜ் நடித்த ஆக்சன் ஃபேண்டசி த்ரில்லர் திரைப்படமான மாயோன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாயோன் படத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் மாயோன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ள மாயோன் படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிபி சத்யராஜின் மாயோன் திரைப்படத்திலிருந்து தேடி தேடி வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ பாடல் இதோ…