சிறந்த நடிகையாக தொடர்ந்து பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா. முன்னதாக இயக்குனர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவரும் அன்யாஸ் டுட்டோரியல் திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி நேரடியாக Aha தமிழ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக தெலுங்கில் சாகினி டாகினி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் ரெஜினா கெஸன்ட்ரா தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் சூர்ப்பனகை திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பார்டர், கள்ளபார்ட், கருங்காப்பியம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரெஜினா கெஸன்டரா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள வெப்சீரிஸ் ஷூர்வீர். JUGGERNAUT புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரும் ஷூர்வீர் வெப்சீரிஸுக்கு சமர் கான் கதை திரைக்கதை எழுத, இயக்குனர் கணிஷ்க் வர்மா இயக்கியுள்ளார்.

வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ஷூர்வீர் வெப் சீரிஸில் ரெஜினா கெஸன்ட்ரா, மகராந்த் தேஷ்பாண்டே, மனிஷ் சவுத்ரி, அர்மான் ரல்ஹான், ஆடில் கான், அபிஷேக் சாகா, அஞ்சலி பரோட், குல்தீப் சரீன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் ஷூர்வீர் வெப்சீரிஸின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…