இந்திய திரை உலகின் குறிப்பிடப்படும் மிக முக்கிய நடிகராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் நடிகர் மாதவன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி.ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான திரு.நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக உருவாகியிருக்கும் ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 
 
முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டினர். இதனிடையே நேற்று    (ஜூன் 27) ராக்கெட்ரி திரைப்படத்தில் திரு.நம்பி நாராயணன் அவர்களின் கதாபாத்திரமாக மாறிய நடிகர் மாதவனின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் ராக்கெட்ரி படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர் சூர்யா, நம்பி நாராயணன் அவர்களின் கதாப்பாத்திரமாகவே மாறிய நடிகர் மாதவனை பார்த்து பிர்ம்மிப்படைந்த வீடியோ வெளியானது. ராக்கெட்ரி ஷூட்டிங்கில் மாதவனை பார்த்து பிரமித்த சூர்யா, திரு.நம்பி நாராயணன் அவர்களையும் சந்தித்து பேசிய வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)