இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து தெகிடி, சம்டைம்ஸ், ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பாக நடித்த அசோக் செல்வன் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டில் (2022) வரிசையாக சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல் மற்றும் வேழம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்த படமாக தயாராகியுள்ள திரைப்படம் நித்தம் ஒரு வானம். அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு தெலுங்கில் ஆகாஷம் என பெயரிடப்பட்டுள்ளது.

வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று கதாபாத்திரங்களில் அசோக்செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷ்வதா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விது அய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட வரும் நவம்பர் 4ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பலரது கவனத்தையும் ஈர்த்த நித்தம் ஒரு வானம் ட்ரைலர் இதோ…