ஓட்டு மொத்த திரையுலக ரசிகர்களுக்கும் ஃபேவரட் கதாநாயகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் யார் என்று கோலிவுட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பல இயக்குனர்களின் பெயர்கள் உலா வருகின்றன.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்திய திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த இரண்டு திரைப்படங்களையும் (Thalaivar 170,Thalaivar 171) தயாரிக்கிறது. 

இன்று (அக்டோபர் 28) லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சென்னையின் போயஸ் கார்டனில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒரு திரைப்படத்தின் படப்பூஜை வருகிற நவம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்த இதர அட்டகாசமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் லைகா உறுதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். (1/2)@rajinikanth @gkmtamilkumaran pic.twitter.com/UDer8Rgklv

— Yuvraaj (@proyuvraaj) October 28, 2022