பல கோடி சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஃபேவரட் ஹீரோவாக தனக்கென தனி சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் மேற்கொண்ட பார்வை வலிமையாக திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமார் - H.வினோத் - போனிகபூர் - நீரவ் ஷா கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஆக தயாராகி இருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

அஜித் குமாருடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ராஜதந்திரம் வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாக உள்ளன. ஆம் வீரம் - ஜில்லா படங்களுக்கு பின் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரிலீசுக்கு பிறகு துணிவு திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும், OTT உரிமையை Netflix நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

𝐇𝐞𝐫𝐞’𝐬 𝐭𝐡𝐞 𝐁𝐈𝐆 𝐍𝐄𝐖𝐒!🎉🥁

WE’RE BEYOND EXCITED TO ANNOUNCE OUR ASSOCIATION WITH #AJITHKUMAR’s #THUNIVU

Get ready for #ThunivuPongal!⚡️#NoGutsNoGlory#HVinoth @BoneyKapoor @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @mynameisraahul #romeopictures @kalaignartv_off pic.twitter.com/zpi22xsNby

— Red Giant Movies (@RedGiantMovies_) October 28, 2022