இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டில்(2022) வெளிவந்த திரைப்படம் ராதே ஷ்யாம். இதனை அடுத்து ராமாயணத்தை தழுவி இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிப்ருஷ் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் 12-ம் தேதி ஆதிப்ருஷ் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் அமிதாப்பச்சன் & தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே கே ஜி எஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஃஷ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சலார் திரைப்படத்தை HOMBALE FILMS நிறுவனம் தயாரிக்கிறது.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்யும் சலார் திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைகிறார். அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சலாம் திரைப்படத்தை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#Salaar Shooting In Progress 🎥

— Salaar (@SalaarTheSaga) October 28, 2022