தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா முதல் முறையாக நடித்துள்ள தி வில்லேஜ் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய கேப்டன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவர உள்ள கேப்டன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் அடுத்த பாடலாக கைலா எனும் ரொமான்டிக்கான பாடல் நாளை (ஆகஸ்ட் 11ஆம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் கார்க்கி எழுதியிருக்கும் இந்த கைலா பாடலை முன்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் பாடகர் யாசின் நிசார் இணைந்து பாடியுள்ளனர்.
 

#Kylaa, our second single from #Captain is releasing tomorrow at 5PM! ❤️ Get ready to be Shreya Goshaled with love! 😀✨
.
.
.@arya_offl @ShaktiRajan @SimranbaggaOffc @shreyaghoshal #YazinNizar #AishwaryaLekshmi @immancomposer @madhankarky @tkishore555 @ThinkStudiosInd pic.twitter.com/bXZ6jnchgB

— Think Studios (@ThinkStudiosInd) August 10, 2022