தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து நல்ல கதை களங்களை கொண்ட தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் முதல்முறையாக சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

கே ஜி எஃப்-ஐ கதை களமாக கொண்டு 3Dல் தயாராகும் பிரம்மாண்டமான இத்திரைப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மிக அழுத்தமான அரசியல் கொண்ட வித்தியாசமான கதைக்களத்தோடு அழகிய காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. 

காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் வெளிவரும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், டென்மா இசையமைத்துள்ளள்ளார். 

வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த ட்ரைலர் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அட்டகாசமான நட்சத்திரம் நகர்கிறது ட்ரைலர் இதோ…