ரசிகர்கள் விரும்பும் என்டர்ட்டைனிங் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து தமிழ் திரை உலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் காஃபி வித் காதல். கலகலப்பு 2 படத்திற்கு பின் மீண்டும் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தில் காஃபி வித் காதல் பிரபல தொகுப்பாளினி DD-திவ்யதர்ஷினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் சுந்தர்.C நடிப்பில் வல்லான் மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு சுந்தர்.C நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தலைநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரான 2-ம் பாகமாக தலைநகரம் 2 திரைப்படத்திலும் சுந்தர்.C நடித்துள்ளார்.

இயக்குனர் VZ.துரை இயக்கத்தில் சுந்தர்.Cயுடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு, யோகிபாபு, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ரவி மரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். SM.பிரபாகரன் மற்றும் இயக்குனர் VZ.துரை இணைந்து தயாரிக்கும் தலைநகரம் 2 படத்திற்கு E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் தலைநகரம் 2 திரைப்படத்திற்கு மது.R இசையமைத்துள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைநகரம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்தது, இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுந்தர்.Cயின் தலைநகரம் 2 திரைப்படத்திற்கான தன் பகுதி டப்பிங் பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், சுந்தர்.C டப்பிங்கில் ஈடுபட்டுள்ள வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ இதோ…
 

Director @vdhorai Directorial #SundarC Starring #Thalainagaram2 Movie Dubbing Started@righteye2021 #SMPrabakaran @krishnasamy_e@vichuviswanath#RightEyeTheatres #RSvenkat @maddyraja1 @teamaimpr pic.twitter.com/ps1GaR9FID

— Team AIM (@teamaimpr) August 19, 2022