தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அர்த்தஜாமம் தொடரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக ராட்சசி திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த புதிய திரைப்படத்திற்காக பெரிய மீசையுடன் மிரட்டலான கெட்டப்பில்  அருள்நிதி இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்தன. இந்த வரிசையில்  அருள்நிதி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் டைரி. இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் டைரி படத்தில் காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ளார்.

அருள்நிதியுடன் இணைந்து பவித்ரா கதாநாயகியாக நடிக்கும் டைரி படத்தில் ஆடுகளம் கிஷோர், ஜெயப்பிரகாஷ் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். FIVE ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் அவர்கள் தயாரித்துள்ள டைரி திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து பலவிதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் வித்தியாசமான த்ரில்லர் படமாக டைரி திரைப்படம் தயாராகியுள்ளது.முன்னதாக வெளியான டைரி திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் டைரி திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#Diary Journey tickets for all age groups !!

Film censored with U/A certification. Releasing on August 26th. #DiaryFromAug26
@kathiresan_offl @innasi_dir @RedGiantMovies_ @Udhaystalin @ahatamil pic.twitter.com/8EU34kgwMS

— Done Channel (@DoneChannel1) August 19, 2022