விரைவில் பத்துதல இறுதிக்கட்ட ஷூட்டிங்...இயக்குனர் பகிர்ந்த வைரல் புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | July 09, 2022 15:28 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.
ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தந்தையின் டிரீட்மென்ட்டிற்காக அமெரிக்கா சென்றிருந்த சிலம்பரசன் தற்போது சென்னை திரும்பியுள்ளார்,பத்துதல படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவுடன் சிலம்பரசன் இருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
All set for #pathuthala shoot with bro @SilambarasanTR_ feeling happy for recovery of his dad @kegvraja @StudioGreen2 @Gautham_Karthik @arrahman @PenMovies @NehaGnanavel @Dhananjayang pic.twitter.com/S9JbYXEncy
— Obeli.N.Krishna (@nameis_krishna) July 8, 2022