தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதனையடுத்து அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து பார்டர், பாக்ஸர், சீனம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக வெப்சீரிஸில் களமிறங்கியுள்ள அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் கதாநாயகனாக நடித்துள்ளார். அருண் விஜயுடன் இணைந்து வாணிபோஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸுக்கு ராஜசேகர் ஒளிப்பதிவில்,V.J.சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்ய, விகாஸ் படிஸா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீசாகவுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த டீசர் இதோ…
 

The most awaited teaser of our first web-series #Tamilrockerz, a @SonyLIV Tamil Original, starring @arunvijayno1 directed by @arivazhagan is now here for you

Streaming soon on SonyLIV.@vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu @arunaguhan_ pic.twitter.com/hgmPzt0jKC

— AVM Productions (@avmproductions) July 3, 2022