உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் FAN BOY சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டி ALL TIME RECORD ஆக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. ரிலீசாகி 5 வாரங்களை கடந்தும் விக்ரம் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, ஜாபர் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

கிரிஷ் கங்காதரன் அட்டகாசமான ஒளிப்பதிவில், ராக்ஸ்டார் அனிருத்தின் அதிரடியான பாடல்கள் மற்றும் பின்னணி இசையில், ஃபிலோமின ராஜின் கச்சிதமான படத்தொகுப்பில், அன்பறிவு மாஸ்டர்களின் பக்காவான ஸ்டண்ட் இயக்கத்தின் ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் வர்த்தக ரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது போலவே விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தற்போது விக்ரம் திரைப்படத்தை பார்த்து ரசித்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகேஷ்பாபு,

விக்ரம்- பிளாக்பஸ்டர் சினிமா!!  இந்தக் காலகட்டத்தில் கல்ட் கிளாசிக்!!  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களை நேரில் சந்தித்து விக்ரம் திரைப்படத்தின் மொத்த செயல்முறை குறித்து ஆலோசிக்க விரும்புகிறேன். அட்டகாசமான சென்சேஷனல் திரைப்படம் ப்ரதர்...
விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் இருவரும் இதைவிட சிறப்பாக நடித்து விட முடியாது என சொல்லும் அளவுக்கு மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். வாவ்! அனிருத், என்ன ஒரு பின்னணி இசை!, நீங்கள் கொடுத்ததிலேயே மிகச்சிறந்த இசை. என்னுடைய பிளே லிஸ்டில் நீண்ட காலத்திற்கு முதலிடத்தில் இருக்கும் இன்னும் ஜொலிப்பீர்கள்!
கடைசியாக லெஜண்ட் கமல்ஹாசன்! உங்கள் நடிப்பைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு நான் தகுதியானவன் கிடையாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும்… உங்களின் மிகப்பெரிய ரசிகன். இது எனக்கு ஒரு பெருமையான தருணம். கமல்ஹாசன் சார் உங்களுக்கும் உங்கள் அற்புதமான அணியினருக்கும் எனது வாழ்த்துக்கள்” 

என தெரிவித்துள்ளார். மகேஷ்பாபுவின் அந்த பதிவு இதோ…