தென்னிந்திய திரை உலகில் முன்னணி கமர்ஷியல் ஹீரோ மற்றும் இயக்குனராக தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் பக்கா மாஸ் என்டர்டெய்னிங் திரைப்படங்களை வழங்கிவரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் P.வாசு இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக லாரன்ஸ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ருத்ரன். தயாரிப்பாளர் S.கதிரேசன் தனது FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ளது. ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் ருத்ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியான நிலையில், ருத்ரன் திரைப்படம் வருகிற டிசம்பர் 23-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Presenting the Second Look of @offl_Lawrence master in #Rudhran#Rudhran In Theaters Worldwide From December 23 2022#RudhranFromDecember23@offl_Lawrence @kathiresan_offl @realsarathkumar @gvprakash @priya_Bshankar @RDRajasekar @editoranthony @onlynikil pic.twitter.com/Tqntry9XTJ

— Five Star Creations LLP (@5starcreationss) July 3, 2022