தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வரும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விரட்ட பர்வம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து சாய் பல்லவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் கார்கி.

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள கார்கி திரைப்படத்தை ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடும் கார்கி திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது

கார்கி படத்தில் சாய்பல்லவி உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷ்ரயான்தி  மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தா இசை அமைக்க கார்க்கி திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் கார்கி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியானது. வருகிற ஜூலை 15ஆம் தேதி கார்கி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Catch #Gargi in theatres from July 15th! @Suriya_offl #Jyotika @rajsekarpandian @prgautham83 @Sai_Pallavi92 @blacky_genie @SakthiFilmFctry @sakthivelan_b #AishwaryaLekshmi #GovindVasantha @kaaliactor @cheps911 @jacki_art @srkalesh pic.twitter.com/kRwjIVjgDc

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 2, 2022