தமிழ் திரை உலகின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் இந்த ஆண்டு(2022) அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

3-வது முறையாக இணைந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன்.TR கூட்டணியில் தயாராகியிருக்கும் வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹன்சிகாவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள மஹா திரைப்படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் U.R.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக வெளிவரும் மஹா படத்தில் ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரிப்பில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ON SKY டெக்னாலஜி வழங்கும் மஹா படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ இதோ…
 

#Maha From July 22nd🔥🔥 countdown begins..
The gripping thriller is releasing in theatres on July 22.#MahaFromJuly22nd#maha #hansika50th #str@malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @OnSkyoffl@Sureshmouttou @ghibranofficial @DoneChannel1@dir_URJameel pic.twitter.com/KRVYII8tWe

— Etcetera Entertainment (@Etceteraenter) July 2, 2022