இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாரித்த மகத்தான தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரோடக்சன்ஸ். திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சித் தொடர்களையும் ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஏவிஎம் நிறுவனம் மீண்டும் தனது தயாரிப்பை தொடங்கியுள்ளது அந்தவகையில் முதல்முறையாக ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள வெப்சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ்.திரையுலகினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் மையப்படுத்தி இந்த வெப்சீரிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பலகோடி ரூபாய் முதலீட்டில் சிறந்த படைப்பாளிகளின் கற்பனைகளை கடின உழைப்பால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையில் செதுக்கிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் குறித்து தயாராகியுள்ள இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, வாணிபோஜன், M.S.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸுக்கு ராஜசேகர் ஒளிப்பதிவில்,V.J.சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்ய, விகாஸ் படிஸா இசையமைத்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லைவ் தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸின் புதிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸின் விறுவிறுப்பான புது ட்ரைலர் இதோ…