நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோமாளி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ்டுடே. இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் லவ் டுடே படத்திற்கு பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

யுவன் சங்கர் ராஜா லவ் டுடே திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக லவ் டுடே திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளிவந்த சாச்சிட்டாளே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து 2வது பாடலாக என்னை விட்டு பாடல் நாளை ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் மெலடி பாடலாக தயாராகியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் என்னை விட்டு பாடலின் வரிகளை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் எழுத, பிரபல பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்நிலையில் என்னை விட்டு பாடல் ரிலீசை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…