தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடிகர் விஷால் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த வரிசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது

மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.வினோத்குமார் தயாரிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க, கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN இந்தியா திரைப்படமாக வெளிவர உள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயமடைந்துள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இன்று (ஆக்ஸ்ட் 11) ரிஸ்கான ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது நடிகர் விஷால் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் தானே ரிஸ்க் எடுத்து நடித்து வரும் விஷால் முன்னதாக வீரமே வாகை சூடும் , லத்தி ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போதும் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.