கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நலிவடைந்திருந்த திரையரங்குகள் கடந்த சில மாதங்களாக மீண்டும் திருவிழாக்கோலம் கொண்டுள்ளன. சினிமா ரசிகர்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது. வரிசையாக இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

அந்த வகையில் தமிழில் அஜித்குமாரின் வலிமை, எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR, கன்னட நடிகர் யஷ்-ன் கே.ஜி.எஃப் சாப்டர் 2, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், தளபதி விஜயின் பீஸ்ட், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்கள் இதுவரை ரிலீஸாகியுள்ளன.

மேலும் தொடர்ந்து வரும் வாரங்களில் கார்த்தியின் விருமன், தனுஷின் திருச்சிற்றம்பலம், சீயான் விக்ரமின் கோப்ரா, சிலம்பரசன்.TR-ன் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, ஆர்யாவின் கேப்டன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இந்நிலையில் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சென்னையில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கம் இனி வரும் வாரங்களில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஒரு டிக்கெட் வெறும் 99 ரூபாய்க்கு விற்கப்படும் என அதிரடியான ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த அதிரடி ஆஃபர் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

All Wednesdays ticket price flat 99rs in our @kamala_cinemas pic.twitter.com/haLf50VL2g

— Kamala Cinemas (@kamala_cinemas) August 10, 2022