தமிழ் திரை உலகின் இன்றியமையாத இசையமைப்பாளராக பலகோடி இசைப்பிரியர்களின் இதயங்களை தன் இசையால் வசப்படுத்திய யுவன்ஷங்கர் ராஜா இன்று (ஆகஸ்ட் 31) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். யுவனின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

இசைஞானியின் பாடல்கள் காலம் கடந்து ரசிக்கப்படுவது போலவே கடந்த 25 ஆண்டு காலமாக யுவனின் இசையும் இசை ரசிகர்களுக்கு போதையாக, டிப்ரஷனை போக்கும் மருந்தாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இசைஞானி இளையராஜா தனது மகன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜா பிறந்த தருணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கதையாக சொல்லியுள்ளார் இளையராஜா.

ஒரு காலகட்டத்தில் ஆழியாறு அணைக்கட்டு அருகில் தங்கியிருந்து திரைப்படங்களுக்கான பாடல்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்த இளையராஜா, மறைந்த இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கான கம்போஸிங் பணிகளுக்காக ஆழியாறு சென்றுள்ளார்.

அப்போது இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜானி திரைப்படத்திற்கான இசை அமைப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜானி திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களாக இருக்கின்றன. அதிலும் ஜானி படத்தின் செனோரீட்டா பாடலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

ரொமான்டிக்கான செனோரீட்டா பாடலை கம்போஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில் இளையராஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி வந்தது.  சூப்பர் ஸ்டாரின் செனோரீட்டா பாடல் கம்போஸ் செய்த நேரத்தில் பிறந்த அந்த ஆண் குழந்தை யுவன் ஷங்கர் ராஜா… என தெரிவித்த இளையராஜா வீடியோவின் இறுதியில் "ஹாப்பி பர்த்டே யுவன்" என மனமார வாழ்த்தி உள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l

— Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022