தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடைசியாக கடந்த ஜூலை 1-ம் தேதி ரிலீஸான த்ரில்லர் படமான D-BLOCK திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே ராட்சசி படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அருள்நிதி தற்போது கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக பெரிய மீசையுடன் முற்றிலும் மாறுபட்ட புதிய கெட்டப்பில் அருள்நிதி இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன.

இந்த வரிசையில் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ள தேஜாவு திரைப்படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள தேஜாவு திரைப்படத்தை ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

தேஜாவு படத்தில் அருள்நிதி உடன் இணைந்து மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், அச்சுத் விஜய், சேத்தன், மைம் கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள தேஜாவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேஜாவு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான அந்த ட்ரைலர் இதோ…