மலையாளம் சினிமாவின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் டெல்னா டேவிஸ்.அடுத்ததாக சில தமிழ் படங்களில் நடித்து அசத்தினார் டெல்னா டேவிஸ்.குரங்கு பொம்மை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் டெல்னா.

அடுத்ததாக சில வருடங்கள் படிப்பிற்காக பிரேக் எடுத்த டெல்னா, சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார்.பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் டெல்னா.

இந்த தொடரில் விராட் ஹீரோவாக நடித்து வருகிறார்.மஹாலக்ஷ்மி,கன்யா பாரதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரில் அவ்வப்போது சில நடிகைகள் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கின்றனர்.பல விறுவிறுப்பாந திருப்பங்களுடன் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.