நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேனின் டாக்டர் என அடுத்தடுத்து டார்க் காமெடி திரைப்படங்களை வழங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனையடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோலமாவு கோகிலா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் தயாராகியுள்ள கோலமாவு கோகிலா ரீமேக் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் லக் ஜெர்ரி படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ், கலர் எல்லோ புரோடக்சன்ஸ், மஹாவீர் ஜெயின் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. குட் லக் ஜெர்ரி திரைப்படம் வருகிற ஜூலை 29ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தற்போது குட்லக் ஜெர்ரி திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…