இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் சிறந்த நடிகையாக பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடைசியாக கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட்டில் ரிலீஸான தாக்கட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இருப்பினும் முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தின் கங்கனா ரனாவத் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த வரிசையில் தற்போது மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகும் எமர்ஜென்சி திரைப்படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்திய அரசியல் ஆளுமைகளில் மிக முக்கியமானவரும் இந்தியாவின் இரும்பு பெண்மணியுமான இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ரேணு பிட்டி உடன் இணைந்து தனது மணிகர்ணிகா பிலிம்ஸ் சார்பில் எமர்ஜென்சி திரைப்படத்திற்கு கதை எழுதி, தயாரித்து, இயக்கி, நடிக்கிறார் கங்கனா ரனாவத்.  எமர்ஜென்சி திரைப்படத்திற்கான திரைக்கதை வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். 

இந்நிலையில் எமர்ஜென்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் பிரம்மிக்க வைக்கும் வகையில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் அட்டகாசமான எமர்ஜென்சி ஃபர்ஸ்ட் லுக் டீசர் இதோ…