“எல்லாம் மாறும்.. உள்ளம் சேர்ந்தா..” மனதை மயக்கும் ஏ.ஆர் ரஹ்மான் குரலில் வெளியான மாமன்னன் 2nd single.. – வைரலாகும் வீடியோ உள்ளே..

இரண்டாவது பாடலை வெளியிட்ட மாமன்னன் படக்குழு வைரல் வீடியோ இதோ -  Ar rahman maamannan 2nd single out now | Galatta

இந்தியா சினிமாவின் பெருமைமிகு கலைஞராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். தொடர்ந்து பல தசாப்தங்களாக பல ஹிட் ஆல்பங்களை கொடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழியிலும் முன்னணியில் இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் இந்த ஆண்டு தன் ரசிகர்களுக்கு அட்டகாசமான இசை விருந்து கொடுத்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் ஆல்பத்தை கொடுத்தார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் ‘பொன்னியின் செல்வன் 2 ‘ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்து மொழியிலும் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ ஆர் ரஹ்மான் மலையாளத்தில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள பிரித்வி ராஜ் நடித்து தயாரித்து வரும் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படத்திற்கும் ஐஸ்வரியா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட் கதைகளத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் SciFi திரைப்படமாக உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் ‘KH234’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அப்படத்தின் உருக்கமான முதல் பாடலை யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல் முன்னதாக வெளியாகி டிரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர் படக்குழு.  ஏ ஆர் ரஹ்மான் இசையில் அவரே பாடிய ‘ஜிகு ஜிகு ரயில்’ பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர். ‘எல்லாம் மாறும்.. ஒண்ணா சேர்ந்தா எல்லாம் மாறும்..’  போன்ற யுகபாரதி வரிகளில் உத்வேகம் அளிக்க கூடிய பாடலாக ஜிகு ஜிகு ரயில் பாடல் அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் ஆந்தேம் க்கு பின் ஏ ஆர் ரஹ்மான் ஸ்டைலாக நடனமாடிய பாடலாகவும் வீடியோவில் சாண்டி மாஸ்டர் நடனத்துடன் வடிவேலு, உதயநிதி ஆகியோரின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.  மேலும் பாடலுடன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை வெளியிட்டனர். அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தற்போது இந்த அப்டேட்டுடன் பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரேட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'செவ்வந்தி' சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ் – விவரம் உள்ளே..
சினிமா

'செவ்வந்தி' சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ் – விவரம் உள்ளே..

போலி தகவல்களை பரப்பாதீர்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ‘பேட்ட’ பட வில்லன்..! – விவரம் உள்ளே.
சினிமா

போலி தகவல்களை பரப்பாதீர்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ‘பேட்ட’ பட வில்லன்..! – விவரம் உள்ளே.

இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..