சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட படக்குழு.. - மனதை மயக்கும் அட்டகாசமான பாடல் இதோ..

மூன்றாவது பாடலை வெளியிட்ட டக்கர் படக்குழு வைரல் வீடியோ உள்ளே - Siddharth takkar 3rd single out now | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த் நடிப்பில் உருவான ‘டக்கர்’ திரைப்படம் வரும் ஜூன் 9 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  பேஷன் ஸ்டுடியோ சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த் ஆக்ஷன் அதிரடியில் மிரட்டும் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திவ்யா கணேஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ஆர் ஜே விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த், அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கம் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய ஜி.எ கௌதம் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அட்டகாசமான ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக உருவாகி உள்ள டக்கர் படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ‘சாகிறேன்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான இப்பாடலை பின்னணி பாடகர்கள் அபய் ஜோத்புர்கர் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை பாடலாசிரியர்  கு கார்த்திக் எழுதியுள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து ‘நிரா’ மற்றும் ‘மரகதமாலை’ பாடல் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது உருகும் காதல் படலான சாகிறேன் பாடல் ரசிகர்களை கவர்ந்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் அவர்களின் டக்கர் திரைப்படம் நீண்ட நாள் கழித்து தமிழில் வெளியாகும் படமாகும். இப்படத்தையடுத்து நடிகர் சித்தார்த், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மாதவன் ஆகியோருடன் இணைந்து நடிகர் சித்தார்த் ‘டெஸ்ட்’ என்ற படத்திலும் மற்றும் ‘சித்தா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..

ரூ 200 கோடி வசூலில் ‘தி கேரளா ஸ்டோரி’.. தடை  குறித்து கங்கனா ரனாவத் கருத்து.. – விவரம் உள்ளே..
சினிமா

ரூ 200 கோடி வசூலில் ‘தி கேரளா ஸ்டோரி’.. தடை குறித்து கங்கனா ரனாவத் கருத்து.. – விவரம் உள்ளே..

“கொலை மிரட்டல்களை சந்தித்தேன்..!” கேன்ஸ் பட விழாவில் உருக்கமாக பேசிய நடிகை சன்னி லியோன்.. விவரம் இதோ
சினிமா

“கொலை மிரட்டல்களை சந்தித்தேன்..!” கேன்ஸ் பட விழாவில் உருக்கமாக பேசிய நடிகை சன்னி லியோன்.. விவரம் இதோ