'செவ்வந்தி' சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. தீவிர விசாரணையில் போலீஸ் – விவரம் உள்ளே..

பிரபல சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை போலீஸ் விசாரணை - Tamil TV show director wife on rathnam wife suicide | Galatta

ரசிகர்களின் மனதை கவர்ந்த தொடராக இருந்து வரும் வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, அழகு போன்ற தொலைக்காட்சி தொடரை எடுத்து முன்னணி சீரியல் இயக்குனர் பட்டியலில் இருப்பவர் இயக்குனர் ஒ.என் ரத்தினம். தற்போது செவ்வந்தி என்ற தொடரை இயக்கி வருகிறார். ரசிகர்களின் ஆதரவை பெற்று தொடர் வெற்றிகரமாக 200நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த தொடரின் இயக்குனர் ஒ.என். ரத்தினம் அவரின் மனைவி பிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒ.என்.ரத்தினம் பிரியா தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. பத்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்த தம்பதியினருக்கிடையே சில பிரச்சனைகள் நிகழ்ந்து வந்துள்ளது. இதையடுத்து மகன்களை சொந்த ஊரான பொள்ளாச்சியில் தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்து இயக்குனர் ஒ.என் ரத்தினம் மற்றும் அவரது மனைவி பிரியா இருவரும் சென்னை வீட்டில் இருந்து வந்துள்ளனர். பின் பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்த மகன்களை ரத்தினம் அழைத்து வர பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் வகையில் இயக்குனர் ஒ.என் ரத்தினம் அவரின் மனைவி பிரியா வீட்டில் இரண்டு வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். பின்னர் பிரியாவின் உடலை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்ற பின் தற்கொலை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறும் முன்னதாக இயக்குனர் ஒ.என் ரத்தினம் பிரியா இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரியாவின் தற்கொலை குறித்த விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ 200 கோடி வசூலில் ‘தி கேரளா ஸ்டோரி’.. தடை  குறித்து கங்கனா ரனாவத் கருத்து.. – விவரம் உள்ளே..
சினிமா

ரூ 200 கோடி வசூலில் ‘தி கேரளா ஸ்டோரி’.. தடை குறித்து கங்கனா ரனாவத் கருத்து.. – விவரம் உள்ளே..

“கொலை மிரட்டல்களை சந்தித்தேன்..!” கேன்ஸ் பட விழாவில் உருக்கமாக பேசிய நடிகை சன்னி லியோன்.. விவரம் இதோ
சினிமா

“கொலை மிரட்டல்களை சந்தித்தேன்..!” கேன்ஸ் பட விழாவில் உருக்கமாக பேசிய நடிகை சன்னி லியோன்.. விவரம் இதோ

விவகாரத்திற்கு ரவி தான் காரணமா? உண்மையை வெளியிட்ட விஷ்ணு.. – விவரம் உள்ளே..
சினிமா

விவகாரத்திற்கு ரவி தான் காரணமா? உண்மையை வெளியிட்ட விஷ்ணு.. – விவரம் உள்ளே..