சூர்யவம்சம் 2 கதை இது தான்.. நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்மான தகவல்.. - முழு வீடியோ உள்ளே..

சூர்யவம்சம் 2 திரைப்படம் குறித்து நடிகர் சரத்குமார் விவரம் உள்ளே - Actor sarathkumar about suryavamsam movie | Galatta

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிபடுத்தி கதாநயாகனாக வில்லனாக குணசித்திர கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் நடிகர் சரத்குமார்.  80 களின் பிற்பகுதியில் வில்லனாக தொடங்கிய சரத்குமார் திரைப்பயணம் ஹீரோவாக பல வெற்றிகளை கொடுத்தது. வில்லன் தொடங்கி ஹீரோ வரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை நடித்து கொடுத்தார் சரத்குமார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய காந்த் கொடிகட்டி பரந்த காலத்தில் சரத்குமார் தன் திறமையினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார்.

அவர் நடிப்பில் வெளியான ‘சூரியன்’, ‘மாயி’, சென்தூரபாண்டியன்’, ‘சூர்ய வம்சம்’, ‘நாட்டாமை’, ‘பாட்டாளி’ உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். முன்னணி ஹீரோவாக வலம் வந்த சரத் குமார் தற்போது முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தளபதி விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் தனி பெயர் பெற்றது. தற்போது அவர் போர் தொழில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் நடிகர் சரத்குமார் அவர்கள் கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூர்யவம்சம் 2 திரைப்படம் குறித்து பேசுகையில்.

“சூர்ய வம்சம், நாட்டாமை படமெல்லாம் அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய சம்பவமா இருந்தது. அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். சின்ன சின்ன வசனங்கள் தான் ஆனால் அழுத்தமான உணர்வை கொடுத்திருக்கிறது. இன்னிக்கு வரைக்கும் அதிக ரசிகர்கள் பார்த்த படமாக சூரிய வம்சம் இருந்து வருகிறது. அவங்களுக்கு அந்த படத்தின் மீது ஆர்வம் இருந்தது.” என்றார் சரத்குமார்.

மேலும் தொடர்ந்து, “சூர்ய வம்சம் பாகம் 2, நானும் எப்படி எடுப்பீங்கனு கேட்டுட்டு இருக்கேன். சூர்ய வம்சம் 2 பண்ணலாம்னு ஐடியா வந்துடுச்சு.. திரைக்கதை எப்படி கொண்டு போறதுதான் பார்க்கனும். ஒருவேளை படத்துடைய பேர் மட்டும் கூட பயன்படுத்தலாம். வேறு ஒரு கிராம பிண்ணனியில் படம் எடுக்கப்பட்டு உருவாகலாம்.. நாட்டாமை படத்தில் நாட்டாமை இறந்தபின் அடுத்த நாட்டாமை உருவான மாதிரி சூரிய வம்சம் படமும் உருவாகலாம். அந்த சின்ன பையன் என்ன ஆனான்.. விரோதிகளின் உறவினர் என்ன பிரச்சனை கொண்டு வருவார்கள் .. எப்படி வேணும்னாலும் கதை பயணிக்கலாம். ” என்றார் சரத் குமார்.

கடந்த 1997 ம் ஆண்டு இயக்குனர் விக்ரம் இயக்கத்தில் ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் உருவான திரைப்படம் சூர்யவம்சம். சரத்குமார், ராதிகா சரத்குமார், தேவயாணி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மிகபெரிய வெற்றியை பெற்று தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சரத் குமார் அவர்கள் தன் திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

போலி தகவல்களை பரப்பாதீர்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ‘பேட்ட’ பட வில்லன்..! – விவரம் உள்ளே.
சினிமா

போலி தகவல்களை பரப்பாதீர்.. வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ‘பேட்ட’ பட வில்லன்..! – விவரம் உள்ளே.

இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..

ரூ 200 கோடி வசூலில் ‘தி கேரளா ஸ்டோரி’.. தடை  குறித்து கங்கனா ரனாவத் கருத்து.. – விவரம் உள்ளே..
சினிமா

ரூ 200 கோடி வசூலில் ‘தி கேரளா ஸ்டோரி’.. தடை குறித்து கங்கனா ரனாவத் கருத்து.. – விவரம் உள்ளே..