இது புதுசா இருக்கே..! அனிருத் இசையில் கவின்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..

அனிருத் இசையில் கவின் நடிக்கும் புதிய படம் வைரல் அப்டேட் இதோ - Kavin next with anirudh musical | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் தொடங்கி இன்று தெலுங்கு திரையுலகிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார். அதன்படி தமிழில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்திலும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திலும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்திலும் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன்’ திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். மேலும் ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 170’ படத்திலும் இசையமைக்கவுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க தெலுங்கில் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் NTR நடிக்கும் தேவரா படத்திலும் மற்றும் சில படங்களிலும் ஒப்பந்தாமாகி வருகிறார். இப்படி தென்னிந்திய சினிமாவில் பிஸியாக வலம் வரும் அனிருத் இளம் நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல நடன கலைஞரும் நடிகருமான சதீஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அயோத்தி பட புகழ் ப்ரீத்தி நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது பூஜையில் இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய பிரனவ் படதொகுப்பு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு குறித்து நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"எனக்கு எப்போதும் ஒரு கனவு இருந்து கொண்டே இருக்கும். சிறியது, பெரியது என்று. அது ஒவ்வொன்றாக நிகழும்  போது ஆச்சரியாமாக உள்ளது. என் கனவுகளில் ஒன்றாக இருப்பது. அனிருத் அவர்கள் என் படத்தில் பாட வேண்டும் என்பது. ஆனால் இப்போது அவர் என் படத்திற்கு  இசையமைக்கவுள்ளார். இது எனது முழு கனவையும் நிறைவேறியது போல் உள்ளது. அவரது ஸ்டுடியோவிற்கு முதல் முறையாக சென்றேன். அதுவும் நம் படத்திற்காக அது ஒரு புது உணர்வாக இருந்தது. இந்த பயணம், வாய்ப்பு எல்லாம் விதி போல் உள்ளது. நான் இதற்காக இயக்குனர் சதீஷ் மற்றும் தயாரிப்பாளார் ராகுல் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

An Anirudh musical ♥️♥️♥️🤗🤗🤗😘😘😘🙏🏼

Words fall short to express the overwhelming gratitude I feel right now. I've always had dreams, big and small, that I wondered if they would ever come true. And one of those dreams was to have the incredible @anirudhofficial sir ♥️ sing… pic.twitter.com/nRjnhnoWe4

— Kavin (@Kavin_m_0431) May 26, 2023

கவின் சின்னத்திரை தொடர் தொடங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சி என்று ரசிகர்களிடம் ஏற்கனவே பிரபலம். அதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் கதாநாயகனாக லிப்ட் படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்றார். சமீபத்தில் அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘டாடா’ திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட் மூலம் தமிழ் சினிமாவில் நம்பகத்தன்மை வாய்ந்த இளம் நடிகர்களில் ஒருவராக தற்போது வலம் வருகிறார். ரசிகர் பட்டாளத்தை குறுகிய காலத்திலே உருவாக்கி வைத்திருக்கும் கவினின் புதிய படத்திற்கு அனிரூத் இசையமைப்பது அப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்கர்களின் கவனத்தை ஈர்த்தி பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.  

விவகாரத்திற்கு ரவி தான் காரணமா? உண்மையை வெளியிட்ட விஷ்ணு.. – விவரம் உள்ளே..
சினிமா

விவகாரத்திற்கு ரவி தான் காரணமா? உண்மையை வெளியிட்ட விஷ்ணு.. – விவரம் உள்ளே..

தீபாவளிக்கு ஜப்பான் விருந்து.. மிரட்டலான தோற்றத்தில் கார்த்தி..-  பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

தீபாவளிக்கு ஜப்பான் விருந்து.. மிரட்டலான தோற்றத்தில் கார்த்தி..- பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

பிரபல இசையமைப்பாளர் ராஜ் மறைந்தார்.. ஏ ஆர் ரஹ்மான் உருக்கம்.. – விவரம் இதோ..
சினிமா

பிரபல இசையமைப்பாளர் ராஜ் மறைந்தார்.. ஏ ஆர் ரஹ்மான் உருக்கம்.. – விவரம் இதோ..